ரஜினியின் வேட்டையன் ஷூட்டிங்..!! படக்குழு கொடுத்த புதிய அப்டேட்..!!

ஜெய் பீம் படம் புகழ் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வேட்டையன்”.ரஜினியின் 170 வது படமான இத்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகின்றது.

இத்திரைப்படத்தில் அமிதா பச்சன், பகத் பாஸில், ராணா ரகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன்  உள்ளிட்டோர் பல்வேறு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இதன் படபிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை, சென்னை, புதுச்சேரி ஆகிய பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

“வேட்டையன்” திரைப்படத்தை அக்டோபர் மாதம் வெளியிடப்பட குழுவினர் முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அனைத்து காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளதாக லைக்கா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் ரஜினிகாந்துக்கு பூங்கொத்து கொடுத்து படக்குழு வழியனுப்பும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து விரைவில் படத்தின் டீசர் அல்லது ஃபர்ஸ்ட்  சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

ஓடிடியில் வெளியாகும் பிருத்விராஜின் ஆடுஜீவிதம்..!! எப்போ தெரியுமா? பரவும் தகவல்..!!

Read Next

பதற வைக்கும் கவர்ச்சி..!! ஹார்ட்ட வைக்கிற இடமா அது..? திணற வைத்த திஷா பதானி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular