ரஜினியை நேரில் சந்தித்த கவிஞர் வைரமுத்து : ரஜினி வைரமுத்து உரையாடல் நீண்டது…!!

வைரமுத்து ரஜினி காந்துடன் எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்..

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் வேட்டையன் இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விருவிருப்பாக நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் மூத்த பாடலாசிரியர்கள் ஒருவரான வைரமுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் சந்தித்துள்ளார் வைரமுத்து பல தமிழ் படங்களில் பல நடிகர்களின் படங்களில் பாடல் வரிகளை எழுதியுள்ளார், அதே நேரத்தில் ரஜினியின் எந்திரன் படத்தில் அரிமா அரிமா அண்ணாமலை படத்தில் வெற்றி நிச்சயம் போன்ற பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, ரஜினிகாந்த் உடன் நடந்த உரையாடல் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில் “கடிகாரம் பாராத உரையாடல் சில பேருடன் தான் வாய்க்கும்” அவர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றார், 80 நிமிடங்கள் உரையாடி இருக்கிறோம் ஒரே ஒரு க்ரீன் டீயை தவிர எந்த இடைஞ்சலும் இல்லை இடைவெளியும் இல்லை என்று வைரமுத்து கூறியுள்ளார்..!!

Read Previous

எப்படிப்பட்ட மணமகன் அமைந்தால் ஒரு பெண் மிகக் கொடுத்து வைத்தவள்..??

Read Next

விருதுநகரில் பட்டாசு தொழிலாளர்களிடம் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துரையாடல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular