
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சத்துணவு பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக ரத்தத்தில் கையெழுத்து இடும் போராட்டத்தினை வருகின்ற ஆகஸ்ட் 17ஆம் தேதி நடத்த உள்ளதாக சத்துணவு பணியாளர் சங்கம் அறிவித்து உள்ளனர்.
சத்துணவு பணியாளர்களுக்கான 4,200 காலி பணியிடங்களை நிரப்ப கூறியும், ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் மாத ஓய்வூதியமாக 6,750 வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பல போராட்டங்களில் நடத்தியும் இதுவரை எந்த ஒரு பலனும் இல்லை. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 17ஆம் தேதி இரத்தத்தில் கையெழுத்திட்டு மனு அளிக்கும் போராட்டத்தினை நடத்த உள்ளதாக சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுவரை நடத்திய எந்த போராட்டங்களுக்கு பயனில்லாததால் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக பேசிய சத்துணவு பணியாளர் சங்கத் தலைவர் சந்திரசேகரன் சத்துணவு பணியாளர்களின் ஏராளமான கோரிக்கைகளை இதற்கு முன்பு அரசுக்கு தெரியப்படுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் இரத்தத்தில் கையெழுத்திட்டு மனுக்கள் கொடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.