
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் முருங்கைக்கீரை சூப்..!! வீட்டிலேயே பத்து நிமிடத்தில் இப்படி செஞ்சு பாருங்க..!!
முருங்கைக் கீரையில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். கர்ப்பிணிகள் கண்டிப்பாக முருங்கைக்கீரை எடுத்துக் கொள்ள வேண்டும். ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களும் முருங்கைக்கீரை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. முருங்கைக்கீரை எடுத்துக் கொள்வதன் மூலம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் . இதில் முருங்கைக்கீரை சூப் வீட்டிலேயே பத்து நிமிடத்தில் எவ்வாறு செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் முருங்கைக்கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை அரை கப்
மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
தக்காளி ஒன்று
மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கறி வேப்பிலை தேவையான அளவு
பூண்டு நாலு பல்
பச்சை மிளகாய் இரண்டு
சீரகம் ஒரு ஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு பெருங்காயம் சிறிதளவு
எடுத்து வைத்துள்ள கீரையுடன் கீரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கீரையை நன்றாக வேகவைத்து எடுக்க வேண்டும்.
அடுத்து பூண்டு கறிவேப்பிலை பச்சை மிளகாய் சீரகம் ஆகியவற்றை நன்றாக கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு மற்றும் நறுக்கிய தக்காளி உப்பு மஞ்சள் தூள் அரைத்த விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தக்காளி நன்றாக வதக்கிய பின்னர் முருங்கைக்கீரை வேக வைத்த நீருடன் அப்படியே சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கினால் முருங்கைக்கீரை சூப் ரெடி.