
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரத்த சோகையால் பாதித்து வருகின்ற நிலை இன்றைய காலகட்டத்தில் அதிகம் உள்ளது, சரியான உணவு முறை பழக்கங்கள் இல்லாத காரணமும் ரத்த சோகைக்கு ஒரு காரணமாகும் அதனைத் தாண்டி ஹீமோகுளோபின் அளவு குறைந்தபட்சத்தில் ரத்தசோகை ஏற்பட்டு அது சில நேரங்களில் மரணத்தையே உண்டு பண்ணுகிறது, ரத்தசோகை நீங்குவதற்கு சில வழிமுறைகளை சில உணவு முறைகளை மாற்றினாலே போதும்..
தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவதால் சிறுநீரை சிரமமின்றி களிக்கு உதவுவதோடு, சிறுநீர் தாரை எரிச்சலையும் போக்கும், மேலும் மூளைக்கு தேவையான ரத்த ஓட்டம் சீராக செல்லவும் இது உதவுகிறது இளமையாக இருக்க வைக்கிறது அதே போல் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க வேர்கடலை சிறந்ததாக இருக்கிறது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது உடலை வலிமையுடனும் வைத்திருக்கிறது முதுமையை தள்ளி இளமையாக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் வேர்க்கடலை தடுக்கிறது, அதேபோல் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, இவற்றையெல்லாம் தாண்டி ஒரு பிடி வேர்க்கடலை இரவு முழுவதும் ஊறவைத்து பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ வெல்லத்துடன் சாப்பிடும் பொழுது உடலில் உள்ள ரத்த பற்றாக்குறையை ஈடு செய்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மேலும் இதன் மூலம் உடலில் உள்ள ரத்த சோகை நீங்கி உடலுக்கு தேவையான ஹீமோகுளோபின் அதிகரிக்கும்..!!