ரயில்நிலையத்தில் கவர்ச்சி நடனமாடிய இளம்பெண்கள்..!! ரீல்ஸ் பெயரில் அட்ராசிட்டிஸ்.!!

கடந்த 2003 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் மாதவன், பூஜா, கலாபவன் மணி ,டெல்லி கணேஷ், பிரியங்கா கோதாரி, தாமு, மாளவிகா, அவினாஷ் உட்பட்ட பல நடிப்பில் வெளியாகிய திரைப்படம் “ஜே. ஜே”.

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் பரத்வாஜ் இசையில் வெளியான இத்திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் காதலர்கள் மத்தியில் இன்று வரை மிகப் பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படமாகவும் உள்ளது. இத்திரைப்படத்தில் “மே மாதம் 98 இல் மேஜர் ஆனேனே” என்ற பாடல் காலம் கடந்தும் ரசிக்கப்பட்டு வருகின்றது.

தற்பொழுது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என பாடல்கள் சித்தரிக்கப்பட்டு பயனளி விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டாலும் ஒரு சில பழைய பாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்பும் இன்று வரை தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் மே மாதம் 98 பாடலுக்கு இன்ஸ்டாகிராம்  பெண்கள் திருச்சி ரயில் நிலையத்தில் அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடி உள்ளனர்.

இதனை தொடர்ந்து ரயில் நிலையத்தில் சர்ச்சை செயலை மேற்கொண்ட இளம் பெண்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதிதனர். ரயில்வே விதிமுறைகளின் படி அனுமதி இன்றி இவ்வாறான ரீல்ஸ் வீடியோக்களை ரயில் நிலையங்களுக்குள் வைத்து தயாரிப்பது அபராதத்திற்கும், தண்டனைக்கும் வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

பற்பசைக்கு பதிலாக எலிப்பசையில் பல்துலக்கிய பெண்மணி பலி..!! தூக்க கலக்கத்தில் சோகம்.!!

Read Next

இயற்கை உபாதையை கழிக்க சென்ற 2 இளைஞர்கள் துடிதுடித்து மரணம்.!! மின்வேலியில் சிக்கி பயங்கரம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular