
பல்லாவரம் அருகே ரயில் முன்பு பாய்ந்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் மகளின் மரணத்திற்கு காதலன் தான் காரணம் என்று மாணவியின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
சென்னை பல்லாவரம் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் பாலமுருகன் விமலா தம்பதியினரின் பகல் ஹேமிதா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள டியூசன் சென்டரில் சிறுவயதில் இருந்து படித்து வருகிறார். அவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது டியூஷன் மாஸ்டர் அஜய் (வயது 26) என்பவருக்கும் ஹேமிதாவுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியது.
இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்ததால் அவர்கள் ஹேமிதாவை கண்டித்தனர். அதற்கு பிறகு ஒரு சில மாதங்கள் இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது .மீண்டும் அதே ஹேமிதாவிம் அஜயும் நேரில் சந்தித்து தங்களது காதலை தொடர்ந்துள்ளனர்.இதனை கேள்விபட்ட பெற்றோர் ஹேமிதா பயன்படுத்தி வந்த செல்போனை அவர் பெற்றோர்கள் வாங்கிக் கொண்டதால் இருவரும் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தான் காதலிக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்த இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி இருவரும் தனது காதலை வளர்த்து வந்தனர். இந்த சூழ்நிலையில் வழக்கம்போல் கடந்த 27ஆம் தேதி தேவிகா வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தார் காலையில் எடுத்து பார்த்தபோது ஹேமிதா காணவில்லை அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அக்கப் பக்கத்தில் தேடியும் ஹேமிதா கிடைக்கப்பெறவில்லை.
காவல்துறையில் புகார் அளித்தானர் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது ரயில்வே போலீசாருக்கும் குரோம்பேட்டை ரயில் நிலையத்திற்கு அருகே ஒரு இளம் பெண்ணின் சடலம் கிடைப்பதாக தகவல் கிடைத்தது. சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் அந்த இறந்த சடலம் ஹேமிதா என்பது தெரிய வந்தது/
இதனை தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து காவல்துறையிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் ஹேமிதாவின் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அதிகாலையில் நடந்த சென்று குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே திருநெல்வேலி சென்னை எக்ஸ்பிரஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் அவர் இறப்பிற்கு காதலன் அதை தான் காரணம் என்று தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.