
Railway Recruitment Board எனப்படும் RRB ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Level 1(Group D) பணிக்கென காலியாக உள்ள 32438 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 36 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகுதியானவர்கள் Computer-Based Test (CBT), Physical Efficiency Test (PET), Document Verification (DV), Medical Examination (ME) அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க 22.02.2025ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது அதனை மாற்றி 01.03.2025ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் செலுத்த 03.03.2025ம் தேதி கடை நாளாகவும், விண்ணப்பங்களை 04.03.2025 முதல் 13.03.2025ம் தேதிக்குள் திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.