
இந்தியாவில் மக்கள் பல பலர் அதிகமாக ரயில் பயணங்களை விரும்புகின்றனர். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்கள் மூலம் பயணம் செய்கின்றனர். பலர் ரயில்களில் சிரமமின்றி பயணம் செய்ய வேண்டும் என்று டிக்கெட்டுகளை முன்னதாகவே முன்பதிவு செய்கின்றனர். அதிகப்படியான மக்கள் தங்கள் ரயில் டிக்கெட்டை ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்கின்றனர். முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சலுகை விலையில் டிக்கெட்டுகளையும் ரயில்வே நிறுவனம் வழங்குகிறது. மேலும், இந்திய ரயில்வே பல பயணிகளுக்கு டிக்கெட் விலையில் பெரும் தள்ளுபடி வழங்குகிறது.
ரயில்வேயின் விதிமுறைகளின்படி மாணவர்கள், பார்வையற்றோர், ஊனமுற்றோர், பாரா பெலஜிக் நபர்கள், காச நோய், புற்று நோயாளிகள், சிறுநீரகம், தொழுநோயாளிகள் ஆகியோருக்கு இந்திய ரயில்வே கட்டண சலுகைகளை வழங்குகிறது. தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினரின் மனைவிகள், போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள், தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள், தொழிலாளர் விருது பெற்றவர்கள், போலீஸ் தியாகிகளின் மனைவிகள், மூத்த குடிமக்கள் மற்றும் பிறர் டிக்கெட் விலையில் சலுகை பெற தகுதியுடையவர்கள்.யுபிஎஸ்சி, மத்திய பணியாளர் தேர்வாணைய முதன்மைத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் டிக்கெட் விலையில் 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. நோயாளிகளுக்கு 75 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.