“ரவா உப்புமா பிடிக்காதா? அப்போ சிறுதானிய உப்புமா ட்ரை பண்ணுங்க..!!”

தமிழர்களின் காலை எளிய உணவு வகைகளில் உப்புமாவும் ஒன்று. இதை தயாரிப்பது எளிதானாலும் கூட. பெரும்பாலும் ரவையை வைத்து தயாரிக்கப்படும் உப்புமாவை தவிர சில சத்தான சிறுதானிய உப்புமா வகைகளை காண்போம்.

சோள உப்புமா

இது ரவைக்கு பதிலாக சோளம் சேர்க்கப்படுகின்றது. மேலும் இதில் வெங்காயம், பட்டாணி, கேரட் ஆகியவை சேர்ப்பதால் ஆரோக்கியமானதும் கூட. இதில் நார்சத்துகள் நிறைந்துள்ளதால் எளிதில் செரிமானம் ஆகும். உடல் எடையும் குறையும்.

ராகி உப்புமா

இதற்கு தேங்காய் பாலில் ராகி மாவை பிசைந்து புட்டு செய்து உப்புமாவை தயாரிக்கலாம். இது அதிக புரத சக்தி நிறைந்துள்ளது.

பாசிப்பருப்பு உப்புமா

முதலில் பாசிப்பருப்பு இட்லி தயாரித்து பின் அதை உதிர்த்து உப்புமாவாக செய்யலாம்.

சோயா பீன்ஸ் உப்புமா

சோயா பீனில் கீமா தயாரித்து பின் அதை உதிர்த்து சோயாபீன் உப்புமா தயாரிக்கலாம்.

குயினோவா உப்புமா

இதிலும் ரவைக்கு பதிலாக குயினோவாவை சேர்க்க வேண்டும். மற்ற செய்முறை அனைத்தும் ரவா உப்புமாவிற்கு செய்வது போல் தான்.

Read Previous

தாம்பத்திய விஷயங்களில் பெண்கள் கவலைப்படும் விஷயங்கள் என்ன..? தெரிஞ்சிக்கோங்க பாஸ்.!!

Read Next

“உடலுக்கு ஆரோக்கியமானது காபியா..? டீயா..? எது சிறந்தது..?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular