
நடிகர் ரவி மோகன் தனது மூத்த மகன் ஆரவின் பிறந்தநாளையொட்டி இரு மகன்களையும் அவர் சந்தித்து பேசி மகிழ்ந்திருக்கிறார். இந்நிலையில், ரவி மோகனின் மனைவி ஆர்த்தி, வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. அப்பதிவில் அவர், ‘ஜாக்கிரதை. சூழ்ச்சி கூட சில நேரங்களில் அன்பு போல தோன்றலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். ரவிமோகன் தனது 2 மகன்களை சந்தித்து பேசியது குறித்துதான் ஆர்த்தி இப்படி பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.