
ரஷ்யா நாட்டின் தலைநகரமான மாஸ்கோவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், மற்ற இரண்டு ட்ரோன்களும் கட்டடங்களின் மீது மோதி விழுந்திருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன்- ரஷ்யா இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போர் துவங்கியதில் இருந்து ரஷ்யாவின் பல்வேறு கட்டடங்கள் மீது ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாக உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகின்றது.
ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவில் நேற்று இரவு உக்ரைன் திடீரென ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் இரண்டு கட்டங்கள் சேதம் அடைந்து இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகின்றன.
இதனால் மாஸ்கோவில் உள்ள வனு கோவா விமான நிலையத்தில் விமான புறப்பாடு மற்றும் வருகை நிறுத்தப்பட்டது. அதன் பின்பு ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அவை இயல்பு நிலைக்கு திரும்பியது.. முன்னதாக இந்த மாத ஆரம்பித்திலே நடத்திய தாக்குதல் காரணமாக அதே விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.