ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் இரண்டு பிரபலங்கள் இணைய இருப்பதாகவும் இரண்டு பேருமே நடிப்பு அரக்கன்கள் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராகவா லாரன்ஸ் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் ’பென்ஸ்’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்தது. இந்த படத்தை ’ரெமோ’ ’சுல்தான்’ போன்ற படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின.
இந்த நிலையில் இந்த படத்தில் தான் தற்போது இரண்டு பிரபலங்கள் இணைய இருப்பதாகவும் இருவருமே வில்லன் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் எஸ்ஜே சூர்யா மற்றும் பகத் பாசில் என தெரிகிறது.
இருவருமே நடிப்பு அரக்கன்கள் என்பதும் எவ்வளவு பெரிய ஹீரோக்கள் நடித்தாலும் இவர்கள் இருவருடைய நடிப்பு மட்டும் தனியாக கவனிக்கத்தக்க வகையில் இருக்கும் என்ற நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.