2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்பு முதல்முறையாக கடந்த ஜூன் 24ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இதை தொடர்ந்து 27ஆம் தேதி ஜனாதிபதி உரையாற்றி பேசினார். இந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்து கடவுளான சிவன் படத்தை காட்டி தனது உரையை தொடங்கியுள்ளார். மேலும் பாஜகவினர் உண்மையான இந்துக்கள் இல்லை தங்களை இந்துக்கள் என்று கூறி கொள்பவர்கள் 24 மணி நேரமும் வன்மறையிலும் நெருப்பிலும் ஈடுபடுகிறார்கள். பாஜகவினர் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதிகள் இல்லை என்றும் அவர் பேசியுள்ளார்.
இவரது பேச்சுக்கு பாஜகவினர் கடும் கட்டடம் தெரிவித்து வந்தனர். ராகுல் காந்தியின் ஒழுக்கமற்ற மாணவர் தலைவரை போல் நடந்து கொள்கிறார் என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான உமா பாரதி விமர்சனம் செய்துள்ளார். மேலும் தகது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பது “இந்துக்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களாகவும், வன்முறையை எதிர்கொள்பவர்களாகவும் இருந்து வருகின்றனர். நேற்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி நடத்தை மற்றும் பேச்சு ஒரு எதிர்க்கட்சி தலைவரை போல் இல்லாமல் ஒழுக்கமற்ற மாணவர் தலைவரை போல் இருந்தது. ராகுல் காந்தி நினைவில் கொள்ள வேண்டும் இப்போது அவர் ஒரு இளைஞர் இல்லை, 50 வயதை கடந்து விட்டார், ராகுல் காந்தி தனது நிலை, தனது நாடு மற்றும் தனது வயதினை கவனிக்க வேண்டும். முழு நாட்டு மக்களுடன் நானும் ராகுல் காந்தியை கண்டிக்கின்றேன்”, என்று அவர் பதிவிட்டுள்ளார்.