
ராகுல் காந்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தல் போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.