ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக இருக்கிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளியையும் ஒவ்வொரு செவ்வாயும் சிறப்பாக இருக்கும் அதனைத் தொடர்ந்து ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியில் நேற்று ராசிபுரம் அருகே உள்ள ஸ்ரீ காளியம்மனுக்கு ராகு கால பூஜை சிறப்பாக நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் ராகு கால பூஜை சிறப்பாக நடைபெற்றது, நேற்று வரலட்சுமி விரதம் என்பதால் அதனோடு சேர்த்து 10008 வளையல் அலங்காரமும், தீவார்த்தனையும், பக்தர்களுக்கு அன்னதானம் என வழங்கப்பட்டுள்ளது, இதில் சுற்றுப்புற மக்கள் எல்லாம் ஸ்ரீ காளியம்மன் ராகுகால பூஜை மற்றும் வரலட்சுமி பூஜை நேரில் கண்டு ஆசி பெற்று சென்றனர்..!!