
ஐபிஎல் தொடங்கி அணைத்து அணியும் தலா ஒரு போட்டி அடியிருந்த நிலையில் நேற்று ராஜஸ்தானுக்கும் கொல்கத்தா அணிக்கும் போட்டி நடந்து முடிந்தது. கொல்கத்தா அணி முதலில் பௌலிங் செய்தது. அப்போது ஆடிய ராஜஸ்தான் அணியால் வெறும் 151 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
மேலும், ஒன்பது விக்கெட்டுக்களை கைவிட்டது ராஜஸ்தான். அந்த அணியில் எவரும் 35 ரங்களுக்கு மேல் எடுக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது. தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, 2 விக்கெட்டுகளை எடுத்து 17 ரன்களை மற்றுமே குடுத்து இருந்தார். மற்ற வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இரண்டாவதாக பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணி பதினெட்டாவது ஒவரிலேயே தனக்கு குடுக்கப்பட்டிருந்த இலக்கை பூர்த்தி செய்தது. இதில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டீ காக் 97 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். ராஜஸ்தான் தனது இரண்டு போட்டியிலும் தோற்று பரிதாபகரமான இடத்தில உள்ளது.