ராமஜெயத்தை கொன்றவர்கள் தான், ஜெயக்குமாரையும் கொன்றனரா.? பட்டியலிடப்படும் ஒற்றுமைகள்.!!

தற்பொழுது மாநில முழுவதும் நெல்லை ஜெயக்குமார் மரணம் பற்றிய தகவல் தான் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. அவர் எப்படி இறந்தார் என்பதை கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. அவரது வீட்டு வேலையாட்கள், குடும்பத்தினர் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என்று பலரிடமும் பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினர் அவரது இறப்பு பற்றி தகவல்களை சேகரிக்க எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களால் அதை சரிவர கண்டறிய முடியவில்லை, ஜெயக்குமாரின் உடல் கிடந்த இடத்திலிருந்து பல்வேறு பொருட்கள் காவல்துறையினர் சேமித்துள்ளனர். அவர் உடலானது எரிக்கப்பட்டிருப்பதால் யாராவது கேன்களில் பெட்ரோல் வாங்கினார்களா என்பதை கண்டறிய காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு நடந்த அமைச்சர் கே என் நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் கொலையும் ஜெயக்குமாரின் மரணமும் ஒன்று போல இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது,

இதற்கு காரணம் ராமஜெயத்தின் வாயில் துணி வைக்கப்பட்டு இருந்தது அதுபோல ஜெயக்குமாரின் வாயில் கம்பி பிரஸ் திணிக்கப்பட்டிருந்தது. ராமஜெயத்தை கொன்று உடலை எரிக்க முயற்சி செய்தனர், ராமஜெயத்தின் கை,, கால்கள் கட்டப்பட்டிருந்தது அதுபோல ஜெயக்குமாரின் கை, கால்களும் கட்டப்பட்டது போன்ற  பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதாக சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் சந்தேகிக்கப்படும் நிலையில் ஒரே கூலிப்படையினர் இந்த இரு கொலைகளையும் செய்திருக்கலாம் என்றும் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.கடந்த 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற ராமஜெயத்தின் கொலை நடந்து 12 ஆண்டுகள் ஆகிய பின்பும் கொலை செய்தது யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்பதால் காவல்துறையினர் இந்த விஷயம் துப்பு துலக்க கடினமானதாக உள்ளது.

Read Previous

கூகுள் மேப்பை பார்த்து, 7 பேரின் உயிரோடு விளையாடிய பெண்.!! சென்னையில் விபரீதம்.!!

Read Next

காதல் கணவனுக்கு கம்பி நீட்டிய மனைவி.. 18 லட்சம் பணம்..!! 15 சவரன் நகையுடன் ஓட்டம்.. 3 பிள்ளைகளை தவிப்பு.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular