
ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள், சர்வதேச வடக்கு-தெற்குப் போக்குவரத்து வழித் தடத்தினை (INSTC) மேம்படுத்தச் செய்யும் வகையிலான இரயில் சேவை இணைப்பினை உருவாக்குவதற்காக சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டு உள்ளன. இது பால்டிக் கடலில் உள்ள ரஷ்யத் துறைமுகங்களை இந்தியப் பெருங்கடல் மற்றும் வளைகுடாவில் உள்ள ஈரானியத் துறைமுகங்களுடன் இணைப்பதற்கு உதவுகிறது. இது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தக விரிவாக்கத்தை மிகவும் எளிதாக்குகிறது. இந்த இரயில் சேவை இணைப்பானது, புவி ரீதியிலான இணைப்பை மேம்படுத்தச் செய்வதற்கும், பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்குமான ஒரு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது.