தெலுங்கானாவைச் சார்ந்த மேட்சல் – மல்காஜ்கிரி மாவட்டத்தில் அமைந்துள்ள உப்பல் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் போலா இவர் கூலி தொழில் செய்து தன் குடும்பத்தை நடத்தி வரும் சூழலில் திருமணம் ஆகி இரண்டு வருடங்களே ஆன மனைவி மதுமிதா (24) இருவருக்கும் 10 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் மதுமிதா சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரில்ஸ் செய்து வரும் பழக்கத்தில் மூழ்கியுள்ளார். இதை கண்டித்து பிரதீப் போலா அடிக்கடி எச்சரித்துள்ளார். இதை பெரிது படுத்தாமல் எப்பவும் போல் தன் வேளையிலேயே கவனம் செலுத்திய மனைவி மதுமிதாவை கண்டிப்புடன் நடத்திய பிரதீப் போலாவிடம் மதுமிதா இப்படி தான் இருப்பேன் என்றும் கோபத்தோடு சொல்ல கோபத்தில் ஆத்திரமடைந்த பிரதீப் போலா தன் மனைவியை கொலை செய்து மனைவி மதுமிதாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி தன் வீட்டின் குளியல் அறையில் அதை மறைத்து போலீசில் சிக்கிக் கொள்ளாமல் தன் 10 மாத பெண் குழந்தையோடு தலைமுறைவாகியுள்ளார்.
இதனால் உப்பல் பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவியுள்ளது மேலும் போலீஸார்கள் பிரதிப் போலாவை மற்றும் அவரது 10 மாத பெண் குழந்தையை கண்டுபிடித்து கைது செய்துள்ளார் பெண் குழந்தையை பாதுக்காப்பான சூழலில் வைத்துள்ளார்கள்.