ருசியான சில்லி கார்லிக் நூடுல்ஸ் செய்வது எப்படி..!!வாங்க தெரிந்து கொள்ளுங்கள்..!!

  • சூப்பரான சில்லி கார்லிக் நூடுல்ஸ் செய்வது எப்படி.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடும் நூடுல்ஸ் சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

  1. நூடுல்ஸ் – 300 கி,
  2. எண்ணெய் – மூன்று ஸ்பூன்,
  3. பூண்டு – மூன்று பல்,
  4. வெங்காயம் – இரண்டு,
  5. பச்சை மிளகாய் – 1,
  6. கேரட் – 1,
  7. கோஸ் – ஐம்பது கிராம்,
  8. குடைமிளகாய்– 1,
  9. வெங்காயத்தாள் – சிறிதளவு,
  10. வினிகர் – 1 ஸ்பூன்,
  11. சோயா சாஸ் – 1 ஸ்பூன்,
  12. சில்லி சாஸ் – 1 ஸ்பூன்,
  13. தக்காளி சாஸ் – 1 ஸ்பூன்,
  14. மிளகுத் தூள் – 1 ஸ்பூன்,
  15. உப்பு – 1 ஸ்பூன்.

செய்முறை: முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும் அதில் நூடுல்ஸ் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு நூடுல்ஸ் வெந்ததும் பாத்திரத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றி தனி பாத்திரத்திற்கு நூடுல்ஸ் மாற்றி வைத்து கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் விட்டு அதில் நறுக்கி வைத்துள்ள கேரட் முட்டைகோஸ் பூண்டு குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.

வதங்கிய பிறகு இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சிறிது உப்பு சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு இதில் வினிகர் சோயா சாஸ் சில்லி சாஸ் மிளகு தூள் தக்காளி சாஸ் சேர்த்து கலந்து விடுங்கள். இதில் வேக வைத்துள்ள நூடுல்ஸ் சேர்த்து கிளறி சிறிது நேரம் கழித்து இறக்கி விடலாம். அவ்வளவு தான் சூடான சுவையான சூப்பரான சில்லி கார்லிக் நூடுல்ஸ் ரெடியாகி விட்டது.

Read Previous

நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக பெண் வேட்பாளர் ஒருவர் வெற்றி..!!

Read Next

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7 சார்நிலை கருவூலகங்களுக்கு 63 ஆயிரம் முத்திரை தாள்கள் வினியோகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular