ருசியான செட்டிநாடு சிக்கன் குழம்பு என்றாலே எல்லோருக்கும் பிடித்த ஒன்று அதனை செட்டிநாடு ஸ்டைலில் சமைப்பது எளிது..
செட்டிநாடு சிக்கன் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள், முதலில் சிக்கன் 1/2 கிலோ எடுத்துக் கொள்ள வேண்டும், பெரிய வெங்காயம் ஒன்று, தக்காளி மூன்று, இஞ்சி பூண்டு விழுது ஒன்றரை ஸ்பூன், கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி, கருவேப்பிலை இரண்டு கொத்து, மிளகாய்த்தூள் ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் அரை டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப எண்ணெய் தேவைக்கேற்ப, வறுத்து அரைக்க வேண்டிய பொருட்கள் தேங்காய் துருவல் அரை கப் காய்ந்த மிளகாய் ஆறு கசகசா 2 ஸ்பூன் தனியா 5 டேபிள் ஸ்பூன் சீரகம் அரை ஸ்பூன் கிராம் ஒன்று பட்டை ஒன்று, சோம்பு ஒரு ஸ்பூன், செய்முறை : வாணலில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு பட்டை, தனியா, சீரகம், சோம்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும், அதனுடன் காகித மிளகாய் சேர்த்து வதக்கி கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும், அதன் பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அனைத்தையும் நைசாக அரைத்துக் கொள்ளவும், மறுபடியும் வாணலில் நாலு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும், அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும், நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக வைக்கவும், சிக்கன் வந்ததும் அரைத்த மசாலா உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும், நன்றாக கொதித்து என்னை பிரிந்து வரும்போது கொத்தமல்லி தலையை தூவி இறக்கி விடவும் சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு ரெடி, ஒருமுறை செய்து பாருங்கள் ருசியின் ஆழத்தை அறிந்து விடுவீர்கள்..!!




