
- பூண்டு ரசம்
தேவையானவை :
புளிக்கரைசல் – ஒரு கப்
முழு பூண்டு – ஒன்று (நசுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
மஞ்சத்தூள் – அரைத் டீஸ்பூன்
நல்லெண்ணெய் – மூன்று டீஸ்பூன்
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
காய்ந்தமிளகாய் – இரண்டு
கடுகு – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
1.புளிகரைசலில் தக்காளியைச் சேர்த்து கரைத்து கொள்ளவும்.ஒரு வாணலியில் சிறிது எண்ணெயை சூடாக்கி அதில் பூண்டை போட்டு பொன்னிறமாக வதக்கி தனியே எடுத்துவைக்கவும்.பின்பு அதே பாத்திரத்தில் புளி கரைச்சலை ஊற்றி அதனுடன் உப்பு மற்றும் மஞ்சத்தூளைப் போட்டு கொதிக்கவிடவும்.
2.கலவை நன்கு கொதித்து பச்சை வாசனை அடங்கியதும் அதில் ரசப்பொடி மற்றும் வதக்கிய பூண்டை போட்டு கலக்கி விட்டு ஒரு இரண்டு நிமிடம் மீண்டும் கொதிக்கவிடவும்.பின்பு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு காய்ந்தமிளகாய் பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு வறுத்து ரசத்தின் மீது கொட்டவும்.