
- மோர்க்கூழ்- சமையல்
மோர்க்கூழ்
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு-1 கப்,
கடுகு, உளுந்து- தலா 1 டீஸ்பூன், புளித்த தயிர்-3 கப்,
மோர் மிளகாய்-5,
கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு-சிறிதளவு.
செய்முறை: அரிசி மாவில் உப்பு, தயிர், பெருங்காயம் போட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மோர் மிளகாய் போட்டுத் தாளித்து கரைத்த மாவை கொட்டிக் கிண்ட வேண்டும் .கடாயில் ஒட்டாமல் வரும் போது கிளறி இறக்க வேண்டும்.
குறிப்பு : மாவு வெந்திருக்கிறதா என்று பார்க்க, மாவை கையில் எடுத்து உருட்டினால் மாவு கையில் ஒட்டக் கூடாது. இது தான் பக்குவம்.