ரூபே கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ரூ.2500/- கேஷ்பேக் – ஜூலை 31 வரை அதிரடி சலுகை..!!

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தற்போது ஒரு புதிய அதிரடி ஆஃபர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி, கனடா, ஜப்பான், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், யுகே மற்றும் அமெரிக்கா ஆகிய 7 நாடுகளில் ரூபே கார்டுகளின் கீழ் டெபிட், கிரெடிட், இன்டர்நேஷனல், ப்ரீபெய்ட் மற்றும் காண்டாக்ட்லெஸ் கார்டுகளை பயன்படுத்தினால் கேஷ்பேக் இலவசமாக கிடைக்கும்.

ரூபே பயனர்களுக்கான ஒரு சலுகையாக அறிவிக்கப்பட்ட இந்த ஆஃபர் மே 15ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.2,500 வரை கேஷ்பேக் தொகை கிடைக்கும். டிஸ்கவர் நெட்வொர்க் அல்லது Diners Club International Network இல் ஏற்றுக் கொள்ளப்படும் கார்டுகளின் வணிகப் பரிவர்த்தனைக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.

இது NPCI வெளியிட அறிக்கையில், “RuPay கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் புழக்கம் அதிகரிப்பதால், மிக மகிழ்ச்சியுடன் இதனை நங்கள் வெளியிடுகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான பரிவர்த்தனைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செய்லபடுத்தி உள்ளோம்” என குறிப்பிட்டுள்ளது.

Read Previous

ரம்யா பாண்டியனை ஓரம்கட்டும் ரச்சிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

Read Next

‘பலத்த காற்று வீசும்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular