
சாமானிய மக்களும் சேமிப்பு தொடங்க வேண்டும் என்பதற்காக “POST OFFICE பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்களில் RD(recurring deposit) எனப்படும் தொடர் வைப்பு நிதி என்ற சிறு சேமிப்பு திட்டமானது முதலீட்டாளர்களுக்கு 6.7% வட்டி வழங்கி வருகிறது. மேலும், இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் என்றாலும், முதிர்வு காலம் முடியும் போது நீங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கணக்கை நீட்டிக்கலாம். அதுமட்டுமின்றி, இதில் மைனர் கணக்கையும் தொடங்கலாம். ஆனால், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயர் மற்றும் டாக்குமெண்டை பதிவு செய்வது அவசியமாகும். மேலும், இந்த திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு ரூ.100 தொடங்கி அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
உதாரணமாக, இப்போது நீங்கள் மாதந்தோறும் ரூ.5000 முதலீடு செய்கிறீர்கள் என்றால், அது 5 ஆண்டுகள் கழித்து உங்களுக்கு முதலீடு தொகையாக ரூ.3,00,000 கிடைப்பதோடு, வட்டி வருமானம் ரூ.56,830-ஐ சேர்த்து மொத்தமாக உங்களுக்கு 3,56,830 ரூபாயாக கிடைக்கும். மேலும், RD திட்டங்களில் வட்டி வருமானமானது 10,000-க்கு மேல் இருக்கும் பட்சத்தில், TDS கழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.