ரூ.1000 உரிமைத்தொகை இவர்களுக்கெல்லாம் இனி கிடையாது – அறிவிப்பு வெளியீடு..!!

ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளின் தரவுகள் ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யார் யாருக்கு ரூ.1000 வழங்குவது நிறுத்தம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.1000 உரிமைத்தொகை:

தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1.06 கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாதமும் 14 அல்லது 15 ஆம் தேதிகளில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டுவிடும் என முதல்வர் உத்தரவாதம் அளித்துள்ளார். மேலும், ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளின் தரவுகள் ஆய்வு செய்யப்படும் எனவும், வருமானம் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் பதிவாகி இருந்தாலும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் உரிமைத் தொகை பெற்றவர்களில் சிலர் தவறான தகவல்களை அளித்து ரூ.1000 பெற்றுள்ளனர். குடும்ப தலைவிகளின் தரவுகள் சரிபார்க்கப்பட்டதில் 8,833 குடும்ப தலைவிகளின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதே போல, மின் கட்டணம் அதிகமாக இருந்தாலும் அடுத்தடுத்த மாதங்களில் ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவது நிறுத்தம் செய்யப்படும். எனவே, சரியான அளவில் மின்சாரத்தை பயன்படுத்தும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Read Previous

தொடர் விடுமுறையொட்டி கொடைக்கானலில் குவிந்த பயணிகள் – அலைமோதும் கூட்டம்..!!

Read Next

கர்ப்ப காலத்தில் பேரீட்சை..!! தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular