
மகளிர் உரிமை திட்டத்தில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மட்டும் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘திமுக தேர்தலுக்கு முன்பு அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றி பெற்றார்கள். வெற்றி பெற்ற பிறகு தகுதியான பெண்களுக்கு மட்டும்தான் ரூ.1,000 வழங்கப்படும் என்று கூறுவது கண்டனத்துக்குரியது. தேர்தலுக்கு முன்பு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் நல்ல அரசு. அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும்’ என்றார்.