ரூ.1000 கோடி ரூபாய் நெருங்கும் கல்கி..!! வரலாற்று சாதனை படைக்குமா..?

இயக்குனர் நாட் அஸ்வினி இயக்கத்தில் உலக சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கல்கி 2898”.

இத்திரைப்படத்தில் அமிதாபச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்ன பென்  உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர் .சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இத்திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்து  உள்ளனர்.

இந்த திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகியது. கமலஹாசனின் தோற்றம் பெரிதும் பாராட்டுகளை பெற்று வருகின்றது. இந்நிலையில் இந்நிலையில் உலக அளவில் “கல்கி 2898 ஏடி” திரைப்படம் ரூ.1000 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் வெளியாகிய “பாகுபலி”, “பாகுபலி 2”, “சலார்”, “ஆதி புரூஸ்” ஆகிய திரைப்படங்களும் இந்தியா முழுவதும் வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தனது பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக இந்தியாவில் இதுவரை செலவிடபடாத அளவிற்கு பொருட் செலவு செய்து “கல்கி 2898 ஏடி” என்கின்ற திரைப்படத்தை தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

வெளியானது வணங்கான் திரைப்படத்தின் டிரைலர்..!! உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

Read Next

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரி இல்லை..!! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கு சிபிஐ விசாரணை தேவை..!! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular