
கல்லூரி பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் புதுமைப் பெண் (Pudhumai Penn) திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், 2025-2026 ஆம் நிதியாண்டு முதல் அரசு கொண்டு வந்திருக்கும் தளர்வுகளின்படி, திருநங்கைகள், திருநம்பியர்கள் மற்றும் இடைபாலினர்கள், புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களில் பயன்பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.