ரூ.13,000 முதலீடு செய்தால்..!! உங்களுக்கு மாதந்தோறும் பென்ஷன் ரூ.1 லட்சம் கிடைக்கும்..!!

மக்கள் பலரும் தங்களின் பணி ஓய்வு காலத்திற்கு பிறகு பொருளாதார நெருக்கடி நிகழா வண்ணம் இருப்பதற்கு “பென்ஷன்” திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். அந்த வகையில், மத்திய அரசானது ” (NPS) தேசிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு நிலையான வருமானத்தை பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்தி வருகிறது. மேலும், NPS-ல் நீங்கள் 25 வயதில் தொடங்கி, மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால், 60 வயதில் பணி ஓய்வு பெறும் நேரத்தில் உங்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 1 லட்சம் கிடைக்கும். இதை எப்படி பெறலாம் என்பதை விரிவாக கீழே காண்போம்.

“தேசிய ஓய்வூதிய திட்டம்” ஆனது 10% வட்டி வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதாவது, நீங்கள் 25 வயதில் தொடங்கி 60 வயது வரை “NPS” திட்டத்தில் மாதந்தோறும் ரூ.13,100 முதலீடு செய்கிறீர்கள் என்றால், 35 ஆண்டுகள் கழித்து மொத்த ரூ.55.02 லட்சம் மற்றும் 10% வட்டி வருமானத்தை சேர்த்து மொத்த தொகையாக ரூ.5.01 கோடி உங்களுக்கு கிடைக்கும். மேலும், முதிர்வு காலத்தில் கிடைக்கும் தொகையில் 40% (2 கோடி) இந்த திட்டத்தில் மீண்டும் முதலீடு செய்ய வேண்டும். மேலும் ஆன்யூட்டி திட்டத்தில் 6% வட்டி வருமானம் கிடைப்பதால், ஓய்வு காலத்தில் மாதந்தோறும் ரூ. 1 லட்சம் என்ற நிலையான பென்ஷன் உங்களுக்கு கிடைக்கும். அதுமட்டுமின்றி, இதில், சட்டம் 80CCD -1B பிரிவின் கீழ் ரூ.50,000 வரை வரி விலக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

இதுவரை சாப்பிடாத அசத்தல் சுவையின் ரெஸ்டாரண்ட் தரத்தில் மஷ்ரூம் 65 கிரேவி..!!

Read Next

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை..!! நேர்காணல் மட்டுமே..!! தேர்வு கிடையாது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular