
ரூ. 2000 நிவாரணமாக வழங்கப்படும்..!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃ பெஞ்சல் புயலாக மாறி கடந்த ஞாயிறுக்கிழமை கரையை கடந்தது. இந்த புயலால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த சூறைகாற்றுடன் கனமழை பொழிந்து எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும், பல மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வாடுகின்றனர்.அவர்களுக்காக, தமிழக முதல்வர் ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, ஃ பெஞ்சல் புயலால் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், 2 நாட்களுக்கு மேல் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ 2000 நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.