ரூ.7 முதலீட்டில் மாதம் ரூ.5000 பென்ஷன் பெறும் திட்டம் – முழு விவரம் இதோ..!!

இந்தியாவில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்து ஓய்வு காலத்தில் எப்படி பயன்பெறுவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஓய்வூதிய திட்டம்:

இந்திய மக்கள் தங்களுடைய எதிர்காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் இருக்க சிறந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய நினைக்கின்றனர். அதற்கான அடல் பென்ஷன் யோஜனா திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் தினமும் 7 ரூபாய் முதலீடு செய்தால், வயதான காலத்தில் 5 ஆயிரம் வரை ஓய்வூதியம் கிடைக்கும். இந்த திட்டமானது கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் இதுவரை 6 கோடிக்கு அதிகமான பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்யலாம். மேலும் வருமான வரி செலுத்துவோர் இந்த திட்டத்தில் சேர முடியாது. அதே போல கணவன், மனைவி இருவரும் இந்த ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம். கணவர் இறந்த பிறகு, மனைவிக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும். இந்த திட்டத்தில் வங்கி கணக்கு மற்றும் ஆதார் அட்டை வைத்து முதலீடு செய்யலாம். வங்கிக்குச் சென்று அடல் பென்ஷன் யோஜனா விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் படிவத்துடன் சமர்ப்பித்து, கணக்கை திறக்கலாம்.

Read Previous

நீங்கள் காணும் கனவுகளும் அவற்றுக்கான பலன்களும்..!! கண்டிப்பாக படியுங்கள்..!!

Read Next

வாட்ஸ் அப் பயனர்களுக்கான சூப்பர் அப்டேட் – வீடியோ காலிலேயே ஆடியோவை ஷேர் செய்யலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular