உலகின் முன்னணி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ், ஹாலிவுட் நிறுவனமான வார்னர் ப்ரோஸை ரூ.7.44 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தால் வார்னர் ப்ரோஸ் ஸ்டூடியோ, திரைப்படங்கள், HBO Max ஓடிடி தளம் அனைத்தும் நெட்பிளிக்ஸ் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. ஹாரி பாட்டர், டிசி காமிக்ஸ், கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற படைப்புகள் இனி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளன.




