ரூ.8 இலட்சம் மின் கட்டணத்தால் அதிர்ந்துபோன விவசாயி..!! அதிகாரிகள் தந்த விளக்கம்.!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பகுதியை சார்ந்த விவசாயி வெங்கடேஷ். இவர் ஒவ்வொரு முறை மின்கணக்கீட்டின்போதும் அரசின் கட்டணபடி தனக்கு வரும் மின் தொகையை தவறாது செலுத்தி வருகின்றார் .

இதனிடையே நடப்பு மாதத்திற்கு மின்கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வெங்கடேசன் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தியில் அவருக்கு ரூ.8.75 லட்சம் மின் கட்டணமாக செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ந்து போன விவசாயி மின் வாரியத்துறை அதிகாரியிடம் சென்று புகார் அளித்து உள்ளார்.

தனது மின் கட்டணத்தை மறு ஆய்வு செய்து நிர்ணயம் செய்யுமாறும் கோரிக்கை வைத்திருந்தார்.இதனையடுத்து, அதிகாரிகள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர்.அந்த தகவலில்,“மின் உபயோக கட்டண கணக்கெட்டின் போது 054 62 என்ற அளவிற்கு பதில் 85490 என்று தவறுதலாக பதிவு செய்யப்பட்ட காரணத்தால் லட்ச கணக்கில் மின்கட்டணம் வந்துள்ளது. தவறு சரி செய்யப்பட்டுள்ளதால் பயனாளி முந்தைய கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை”, எனவும் தெரிவித்துள்ளார்.

Read Previous

தாயின் ஆண் நண்பர் தலையில் கல்லைப்போட்டு கொலை.,!! சொல்லச்சொல்ல கேட்காததால் விபரீதம்.!!

Read Next

மதுரை: தொடர் மழையால் உண்டான திடீர் அருவி..!! ஒத்தக்கடை ஆனைமலையில் குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular