ரூ.8 கோடி மதிப்புள்ள தமிழக சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு..!!
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான தொன்மை வாய்ந்த சோமஸ்கந்தர் உலோக சிலை, அமெரிக்காவின் ஆர்ட் மியூசியத்தில் இருப்பதை தமிழ்நாடு காவல்துறையின் சிலைத் திருட்டு தடுப்பு பிரிவினர் கண்டறிந்துள்ளனர். இணையதள தேடலில் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஏசியன் ஆர்ட் மியூசியமில் இந்த சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.8 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.