
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் 2d என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் படம் எடுக்கப்பட்டு வரும் மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆகப்போகும் படம் தான் ரெட்ரோ. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தின் போஸ்டர்களோ முன்னோட்டமோ அல்லது பாடல்களோ வெளியாகும் போதெல்லாம் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தில் இருந்து அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.
ரெட்ரோ படத்தில் இருந்து கடைசியாக வெளிவந்த இரண்டு பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்று வந்தது. அதுவும் இந்த கணிமா பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஒளித்து வருகிறது. அந்த வகையில் இன்று ரெட்ரோ படத்தின் மூன்றாவது பாடலாக தி ஒன் பாடல் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த பாடலுக்காக ரசிகர்கள் அனைவரும் பெரிதும் காத்திருக்கின்றனர். மேலும் சூர்யாவின் கடைசி சில படங்கள் சரியாக போகாததும் கார்த்திக் சுப்புராஜ் அனைத்து படங்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருவதால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் காத்திருக்கின்றனர்.