தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் வைக்க தேவையான பொருட்கள், ரொக்க பணம், இலவச வேட்டி, சேலை உள்ளிட்டவைகள் வழங்கப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு காலை, மாலையில் தலா 100 பேருக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளன.