தமிழக அரசின் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும் சேவை இன்று (ஜன.4) தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 21 லட்சம் பயனாளிகளுக்கு அடுத்த 2 நாட்களில் ரேஷன் பொருட்க்கள் நேரடியாக விநியோகம் செய்யப்பட உள்ளன. வழக்கமாக மாதத்தின் 2-வது வார இறுதியில் நடைபெறும் இப்பணி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இம்முறை முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது.




