ரேஷன் அட்டையை அரிசி, சர்க்கரை ஸ்மார்ட் கார்டாக மாற்றுவது எப்படி?..

மக்களின் அன்றாட வாழ்வில் அத்தியாவசிய தேவையாக இருப்பது உணவு.  எனவே தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள  மக்களுக்கு உதவும் வகையில் அரிசி பருப்பு சர்க்கரை முதலியன ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கு இது உதவும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு ரேஷன் கார்டு மிகவும் முக்கிய ஆவணமாகும். தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

TNPDS என்ற பக்கத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்கள் தேவையில்லை என்றால் தங்களது அட்டையை பொருட்கள் இல்லாத அட்டையாக மாற்றிக் கொள்ள முடியும். மேலும் தங்களது  அட்டை வகையை மாற்ற இங்கே கிளிக் செய்யவும் எனவும் ஒரு வாசகம் இருக்கும்.  அதனை கிளிக் செய்தால் அடுத்த பக்கத்திற்கு செல்லும். அங்கு ஏற்கனவே நியாயவிலைக்கடையில் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன் கீழ் இருக்கும் கேப்ட்சாவை பதிவு செய்த பிறகு உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும்.  அதனை பூர்த்தி செய்தால். குடும்ப அட்டை மாற்றம் தொடர்பான பக்கத்திற்கு செல்லும். இதில் குடும்ப அட்டை எண், நியாய விலை கடை குறியீடு போன்றவையும் இருக்கும். அதன் கீழே அட்டை வகை மாற்றம் என்ற பெயர் இருக்கும். மேலும் அதில் குடும்ப அட்டை முடக்கவும், தடை நீக்கம் செய்வதற்கும், முகவரி மாற்றத்திற்கும் என பல காலங்கள் இருக்கும்.

ஆனால் அதில் அட்டை வகை மாற்றம் என்ற காலத்தை மட்டும் குறிக்க வேண்டும். அட்டை வகை சர்க்கரை  அட்டையாக இருந்தால் சர்க்கரை அட்டை என பதிவு செய்யப்பட்டிருக்கும். அரசி அட்டையாக இருந்தால் அரிசி அட்டை என பதிவு செய்யப்பட்டிருக்கும். பண்டகமில்லா  அட்டை என்றால் பண்டகம் இல்லா அட்டை என பதிவு செய்யப்பட்டிருக்கும். நமக்கு தேவையானதை நிரப்பி கொண்டு அதன் கீழ் இருக்கும் பகுதியை ஓகே செய்ய வேண்டும். இதனையடுத்து இந்த தகவல்களை உணவு பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும் ரேஷன் கார்டு வழங்கப்படும்.

Read Previous

நோய்களை தீர்க்கும் தன்வந்திரி விரதம்..!! எப்போது எப்படி கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?..

Read Next

கிராமத்து ஸ்டைலில் வீடே மணக்கும் மீன் குழம்பு..!! இந்த மாதிரி செய்ங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular