ரேஷன் அரிசியை வைத்து பஞ்சு போன்ற இட்லி செய்யலாம்..!! அதற்கு மாவு இப்படி மட்டும் அரைத்தால் போதும்..!!

ரேஷன் அரிசியை வைத்து பஞ்சு போன்ற இட்லி செய்யலாம்..!! அதற்கு மாவு இப்படி மட்டும் அரைத்தால் போதும்..!!

இட்லி இந்த காலத்தில் அனைவராலும் விரும்பப்படாத உணவு இட்லி என்று கூட சொல்லலாம். ஏனென்றால் இட்லி கல் போன்று உள்ளது எனக்கு தோசை தான் வேணும் தோசை செய்யேன் இட்லியா, அப்படின்னு நம்ம வீட்ல இருக்க எல்லாரும் கண்டிப்பா சொல்லுவாங்க. இந்நிலையில் ரேஷன் அரிசியை வைத்தே பஞ்சு போன்ற இட்லி எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இட்லி பிரபலமான உணவு என்றாலும் அனைவருக்கும் பிடித்த வகையில் பஞ்சு போன்ற இட்லி செய்வது எப்படி என்பதை பல இல்லத்தரசிகளுக்கு தெரியவில்லை. என் நிலையில் ரேஷன் அரிசியில் பஞ்சு போன்ற இட்லி எவ்வாறு செய்ய வேண்டும் அதற்கு மாவை எவ்வாறு அழைக்க வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம். அதற்கு மூன்று டம்ளர் ரேஷன் புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசி ஒரு டம்ளர் எடுத்து 3 மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக ஊற வைத்தால் அதில் உள்ள அழுக்குகள் எல்லாம் தானாகவே வந்துவிடும். பின்பு ஒரு டம்ளர் உளுந்து மற்றும் இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து இதை நன்றாக இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து உளுந்தை கிரைண்டரில் போட்டு நன்கு மையாக அரைத்து பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பின்பு ஊற வைத்திருந்த அரிசியை நன்றாக ஐந்து ஆறு முறை வாஸ் செய்து விட்டு கிரைண்டரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து உளுந்த மாவு வைத்துள்ள பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக உழுந்தமாவும் அரிசிமாவும் நன்றாக கலக்கும் வகையில் கலக்கி விடவும். பின்பு அதை இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும் அது நன்றாக குளித்து வரும் காலையில் நன்றாக பொங்கி உள்ள நிலையில் இட்லிக்கு ஊற்றி பாருங்கள் பஞ்சு போன்ற இட்லி சூப்பராக ரெடியாகிவிடும். குறிப்பு: மாவு ஆட்டும் போது அரிசி மாவு ஆட்டும் போது தெளிக்கப்படும் தண்ணீர் ஐஸ் தண்ணீராக இருந்தால் கிரைண்டர் சூடாகாமல் மாவு சீக்கிரம் அரைபட்டு வரும். அதே போன்று உளுந்தம் மாவு அரைக்கும் போது இரண்டு மூன்று ஐஸ்கட்டிகளை சேர்த்தால் உளுந்த மாவு அதிகமாகும்.

Read Previous

தூங்குவதற்கு முன்பு தொப்புளில் எண்ணெய் விடுவதால் ஏராள நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கிறது அவசியம் படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

நடைபயிற்சியின் போது தண்ணீர் அருந்தலாமா..?? பலருக்கும் தெரியாத உண்மை இதுதான்..!! கண்டிப்பா தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular