ரேஷன் கார்டில் பெயரை நீக்க எளிய வழிமுறைகள் – வீட்டிலேயே செய்யலாம்..!!

ரேஷன் அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய சேவைகளை பயனாளர்கள் எளிதாக வீட்டிலேயே செய்து கொள்வதற்கு தற்போது பல வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெயர் நீக்க வழிமுறை:

குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்டுள்ளார்கள். நாட்டில் அனைத்து முக்கிய பணிகளுக்கும் அடிப்படை ஆவணமாக ரேஷன் கார்டு மட்டுமே விளங்கி வருகிறது. புதிதாக திருமணமானவர்கள் மற்றும் கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனி குடித்தனம் மேற்கொள்பவர்கள் ரேஷன் கார்டில் இருந்து பெயர்களை நீக்க வேண்டும். இதற்கான எளிய வழிமுறைகளை வீட்டிலேயே செய்து கொள்ள முடியும். அவற்றை கீழே காணலாம்.

வழிமுறைகள்:
  1. தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதில் மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்பதை தேர்வு செய்து குடும்ப உறுப்பினர் நீக்கம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  3. இதனை தொடர்ந்து வரும் புதிய பக்கத்தில் பழைய ரேஷன் கார்டுடன் இணைத்துள்ள உங்கள் செல்போன் நம்பரை பதிவிட வேண்டும்.
  4. பின்னர் உங்களது செல்போனுக்கு ஒரு ஓடிபி எண் வரும், அந்த நம்பரை பதிவிட்டு பதிவு செய் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  5. இப்பொழுது உங்கள் ரேஷன் கார்டின் விவரங்கள் தெரிய வரும். இப்பொழுது அட்டைப் பிறழ்வு என்பதையும் புதிய கோரிக்கைகள் என்பதையும் அடுத்தடுத்து கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
  6. தோன்றும் புதிய திரையில் உங்கள் ரேஷன் கார்டு எண் மற்றும் ரேஷன் கடையின் குறியீட்டு எண் போன்றவற்றை சரிபார்த்து சேவையை தேர்ந்தெடுக்கவும் என்ற ஆப்ஷனில் குடும்ப உறுப்பினர் நீக்கம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  7. இப்பொழுது தோன்றும் ஸ்கிரீனில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் நீக்க வேண்டிய பெயரை டிக் செய்து இதற்கான காரணத்தை நிரப்பி உரிய ஆவணங்களோடு அவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
  8. இப்பொழுது உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு ஒன்று இரண்டு நாட்களில் உங்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ரேஷன் கார்டில் இருந்து தேர்வு செய்த பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு விடும்.

Read Previous

கலைஞர் உரிமைத்தொகை வாங்கும் பெண்களுக்கான அப்டேட் – வங்கியின் சூப்பர் திட்டம்..!!

Read Next

தப்பு பண்ணிட்டேன்.. ரன் அவுட்டுக்கு ருத்ராஜிடம் மன்னிப்பு கேட்டேன்.. அதுக்கு அவர் இப்படி ஒரு பதில் தந்தார்.. ஜெய்ஸ்வால் உருக்கமான பேட்டி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular