மக்களின் அன்றாட வாழ்வில் அத்தியாவசிய தேவையாக இருப்பது உணவு. எனவே தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் அரிசி பருப்பு சர்க்கரை முதலியன ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கு இது உதவும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு ரேஷன் கார்டு மிகவும் முக்கிய ஆவணமாகும். தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பரை இணைப்பதற்கு அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் சென்று ஆன்லைனில் ரேஷன் கார்டுகளுடன் மொபைல் நம்பரை பதிவு செய்து இணைக்கலாம். 1967 என்கிற ஹெல்ப்லைன் நம்பருக்கு அழைத்தால் போன் நம்பர் மாற்றுவது குறித்த விபரங்களை கூறுவார்கள். அதேபோல் அருகில் உள்ள தாலுகா ஆபீஸ் அலுவலகத்திலும் ரேஷன் கார்டு தொடர்பான உதவி மையங்கள் இருக்கும். அங்கு சென்று உங்களுடைய மொபைல் நம்பரை ரேஷன் கார்டுடன் இணைத்துக் கொள்ளலாம்.




