ரேஷன் கார்டுதாரர்களுக்கான ஹாப்பி நியூஸ் – பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க ரெடியா?..

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ரொக்கப்பணத்துடன், பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு:

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு, பச்சரிசி உள்ளிட்ட பரிசு தொகுப்புடன், ரூ.1,000 ரொக்க பணமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தாண்டு பொங்கல் பரிசு மற்றும் ரூ.1,000 வழங்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பை அரசு தற்போது வரையிலும் வெளியிடவில்லை. அதாவது, தற்போதைக்கு தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகளின் வாயிலாக ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதனால், தான் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. இந்நிலையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப்பணத்துடன் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு தொகுப்பு அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து வழங்கப்படலாம் எனவும், ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

Read Previous

தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக கூடுதல் நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் – முக்கிய தகவல் வெளியீடு..!!

Read Next

குக் வித் கோமாளி சுனிதாவா இது.. உச்சக்கட்ட கவர்ச்சியில் அப்படியொரு போஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular