தமிழகத்தில் 500க்கும் குறைவான குடும்ப அட்டைகள் இருக்கும் இடங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் 500க்கும் குறைவான குடும்ப அட்டைகள் இருக்கும் இடங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்திருக்கிறார். 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் இதுவரை 699 முழுநேர ரேஷன் கடைகளும், 1310 பகுதிநேர ரேஷன் கடைகளும் என மொத்தம் 2009 ரேஷன் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.