ரேஷன் பொருள்கள் டெண்டர் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

தமிழகத்தில் தமிழக பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்வதற்காக பருப்பு மற்றும் பிற பொருள்கள் எவ்வாறு கொள்முதல் செய்யப்படுகிறது என்பது குறித்து அறிக்கையினை உடனடியாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மசூர் பருப்பை தவிர்த்து துவரம் பருப்பு கொள்முதல் செய்வதற்கான டெண்டறுக்கான தடை கோரி பருப்பு இறக்குமதியாளர்கள் தாக்கல் செய்த மனு தற்பொழுது விசாரணைக்கு வந்தது. இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தற்காலிக தலைமை நீதிபதி அடங்கிய முதல் குழு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் கடந்த மாதம் மே 27ஆம் தேதி அன்று அரசாங்கத்தின் டெண்டரில் துவரம்பருப்பு குறிப்பிட்டபற்றுள்ளது மற்றும் மசூர் பருப்பு விலக்கம் செய்யப்பட்டுள்ளது என்று மனதாரர் குறிப்பிட்டு இருந்தார் .இந்த மனு நிலுவையில் உள்ள நிலையில் இது குறித்து பதில் அளித்த அதிகாரிகள் புதிய டெண்டருக்கான செயல்முறையை முடித்து பருப்பு வாங்க உள்ளார்கள் என்று குறிப்பிட்டார்.

துவரம் பருப்பு வாங்கப்படாமல் அது ஒரு கிலோவுக்கு ரூ. 135 வரை செலவாகும் என்பதால் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என்றும் மசூர் பருப்பு ஒரு கிலோ 87 ரூபாய் வரை செலவாகும் என்றும் அவர் கூறியுள்ளார், இந்நிலை நீடித்தால் மக்களின் ஊட்டச்சத்து சுகாதார பிரச்சனை ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள் என்றும் மனுதாரர் கூறியுள்ளார். நாட்டில் விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Read Previous

உச்சகட்ட போதையில் கால்வாய் அருகே படுத்து உறங்கிய நபர்..!! சடலம் என்று நினைத்து சென்ற தீயணைப்புத் துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

Read Next

திருமணமாகாத பெண் குழந்தையை தத்து கொடுக்கலாம்..!! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular