
கடைகளில் வாங்காம வீட்டிலேயே சிக்கன் தந்தூரி செய்து பாருங்கள் ரொம்ப சுலபமாக
சிக்கனை பெரிய துண்டுகளாய் வாங்கி நல்லா சுத்தம் செய்து அதில் 2 டேப்ளேஸ்பூன் எலும்மிச்சம்பழம் சாரு , 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்து எடுத்து கொள்ளுங்கள்
ஒரு பாத்திரத்தில் கால் கப் கெட்டியான தயிர் , 2 ஸ்பூன் மிளகாய்த்தூள் , 1/2 ஸ்பூன் கரமசாலாதூள் , 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் , 2 ஸ்பூன் தந்தூரி மசாலா ((கடைகளில் கிடைக்கும் )), உப்பு,
1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட் , எல்லாம் சேர்த்து கலந்து விடுங்கள் ,
கலந்து வைத்த மசாலாவை ஊறின சிக்கனுடன் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்
இதை அப்டியே 8 மணிநேரம் இரவு முழுக்க பிரிட்ஜ்யில் வைக்கவும்
தவாவில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து சிக்கனை போட்டு மெதுவான நெருப்பில் வைத்து 15 நிமிடம் திருப்பி போட்டு வேக வைக்கவேண்டும்
நல்லா ரோஸ்ட் ஆனபிறகு சாப்பிட்டு பாருங்கள்..