
காரகொட்டி கீரை :-
காரகொட்டி கீரை, பன்னிமொட்டான் கீரைன்னு சொல்லுவாங்க. பன்றி இறைச்சில எவ்வளவு சத்துக்கள் இருக்கோ அந்த அளவுக்கு சத்துக்கள் இந்த கீரைல இருக்குங்க அதனாலதான் பன்னிமொட்டான் கீரைன்னு சொல்றாங்க. இதோட இலை தண்டு கிழங்குன்னு எல்லாமே சமையலுக்கு பயன்படுத்துவாங்க…..
இந்த கீரை செடி எல்லா சீசன்ல கிடைக்காதுங்க மழை காலங்களில் அதிகம் கிடைக்கும் கிழங்குகள் மூலமாக பரவாக்கூடியாது. களிமண் காடுகள் ஏரி குளங்கள் ஓரத்துல வயல் பகுதியில் பாத்தா இருக்கும்ங்க. இதுல ரெண்டு வகை இருக்குங்க. இலை ஊசி போல இருக்கற ஒரு வகை பட்டையா தாடிமனா இருக்கக்கூடிய இன்னொரு வகை.
ஏராளமான சத்துக்களை கொண்டது இந்த கீரை. மூலநோய்க்கு மிக முக்கிய நிவாரணியா இருக்க கூடியது இந்த கீரை குழந்தைகளுக்கு வயிற்றுல பூச்சிகள் இருந்தா அகற்றக்கூடியது ரொம்ப ரொம்ப குளிர்சியும் கூட…இந்த கீரைல புளிகுழம்பு, கூட்டு, கடையல் எல்லாம் பண்ணி சாப்பிடலாம். இதோட கிழங்குகள மத்த கிழங்குகளை வேக வச்சு சாப்பிடற மாதிரி சாப்பிடலாம்.
ரொம்ப ரொம்ப அரிதான இந்த கீரை கெடச்சா கண்டிப்பா வாங்கி சாப்பிடுங்க முக்கியமா குழந்தைகளுக்கு குடுங்க ரொம்ப நல்லது….