டி20 உலகக் கோப்பையை வென்றதன் மூலம் இந்தியா கேப்டன் ரோஹித் ஷர்மா 3 முக்கிய சாதனைகளை படைத்துள்ளார். 1) டி20 போட்டிகளில் 50 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். 2) டி20 உலகக் கோப்பையை இரண்டு முறை இந்தியா வென்ற போதும் அணியில் இருந்த வீரர் ரோகித் சர்மா தான். 2007 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 16 பந்துகளில் 30 ரன்களை அவர் எடுத்தது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம். 3) ஒரு டி20 உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளையும் வென்ற அணியை வழிநடத்திய கேப்டன் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.