ரோட்டு கடை ஸ்டைல் மீன் வறுவல் செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:
மீன் – அரை கிலோ
மிளகாய் தூள் – 4 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் மாவு – 1 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு – 1 மேசைக்கரண்டி
எண்ணெய் – 100 மில்லி
உப்பு – தேவையான அளவு
அரைக்க:
பூண்டு – 5 பல்
சோம்பு – 1 தேக்கரண்டி
தக்காளி – 1
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் மீனை நன்கு கழுவிக் கொள்ளவும்.பூண்டு, சோம்பு, கறிவேப்பிலை, தக்காளி, உப்பு ஆகியவற்றை அரைத்து, எலுமிச்சைச்சாறு, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து மீனில் பிசறி 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு மீனை 2 அல்லது 3 துண்டங்களாக போட்டு, சிறு தீயில் வறுத்து திருப்பிப்போட்டு சிவந்தவுடன் எடுக்க வேண்டும்.




